இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனிடம் தமிழக அரசியல் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில்,
கேள்வி : இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் அதிமுக வீழ்ச்சியடையும் எனவும், ஜெயலலிதாவின் வெற்றிடத்தை ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரால் நிரப்ப முடியாது என முடிவுகள் கிடைத்துள்ளதே?
மைத்ரேயன் : நான் ஜெயலலிதாவின் விசுவாசி, அவர் எப்பொழுதும் கருத்துக்கணிப்புகளை நம்பியதில்லை; கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என்றார்கள். ஆனால் ஜெயலலிதா வரலாறு படைத்தார்.
கேள்வி : அப்போது ஜெயலலிதா இருந்தார், ஆனால் இப்போது இல்லயே, அது உங்களை பாதிக்காதா ?
மைத்ரேயன் : அப்படி பார்த்தால், திமுகவில் அப்போது கருணாநிதி இருந்தார், இப்போது முழுமையான அரசியலில் ஈடுபட முடியாமல் அவர் உள்ளார். இரண்டு பக்கங்களிலும் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் இப்போது இல்லை. இது எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் ?
கேள்வி : நீங்க சொல்வது மாதிரி பார்த்தால், திமுகவில் ஸ்டாலின் இருக்காரே?
மைத்ரேயன் : ஜெயலலிதா இருந்த போது மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்திருக்கிறார். அதுவே அதிமுகவின் பலம். அது எங்களை வலிமையாக வைத்திருக்க உதவும்
கேள்வி : கருத்துகணிப்பு முடிவுகள் மூலமா பாக்கின்ற போது, ஜெயலலிதாவின் மாற்றாக ரஜினி இருப்பார் என முடிவுகள் வந்திருக்கிறதே?
மைத்ரேயன்: ரஜினியா? ஜெயலலிதாவுக்கு மாற்றாக ரஜினியெல்லாம் வர முடியாது. எங்களுடைய பலத்தால் வெற்றி பெறுவோம், அடுத்தவரின் பலவீனத்தால் அல்ல; ரஜினியோ,கமலோ, நடிகர்கள் யாரும் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. சும்மா ஊடகங்கள் அவர்களை பெரிதாக்குகின்றன.