கட்சி விஷயங்களை மைத்ரேயன் பொதுத் தளத்தில் பேசியிருக்கக் கூடாது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் மனங்கள் இணையவில்லை என ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மைத்ரேயன் முகநூலில் பதிவிட்டு இருந்தார். இது கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதை உறுதி செய்வதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மைத்ரேயன் கட்சி விஷயங்களை பொதுத் தளத்தில் பேசியிருக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் மைத்ரேயன் எந்த மனம் குறித்து பேசுகிறார் என தெரியவில்லை என்றும் கூறினார். மேலும், எதுவென்றாலும் கட்சிக்குள் பேசி தீர்க்கலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.