டிரெண்டிங்

போயஸ் தோட்டத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன்

போயஸ் தோட்டத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன்

Rasus

காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது என மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அதிகார பீடமாக இருந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு சோதனை நடத்தினர். நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்ற சோதனையில் லேப்டாப், 2 பென் டிரைவ் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக ஜெயா டிவியின் சிஇஓ விவேக் ஜெயராமன் தெரிவித்தார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற்ற சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது என ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லம் ஒரு கோயில் எனவும் மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.