டிரெண்டிங்

மதுரை: தேர்தலில் வெற்றிபெற கிடா வெட்டி வழிபாடு செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

மதுரை: தேர்தலில் வெற்றிபெற கிடா வெட்டி வழிபாடு செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

kaleelrahman

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி, புகழ்பெற்ற மதுரை பாண்டி கோயிலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.

நடைபெற இருக்கும் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் காண்கின்றனர். அதற்கான களப்பணிகளை அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 100 வார்டுகளில் போட்டியிட திட்டமிட்டுள்ள அவர்கள் அதற்கான மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கல்லாணை தலைமையில் கூட்டத்தை நடத்தினர்.

இந்த நிலையில், மதுரை பாண்டி கோயிலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கிடா வெட்டி வழிபாடு மேற்கொண்டனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தேர்தலை சந்திக்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.