டிரெண்டிங்

மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி உயிரிழப்பு...நெஞ்சுவலியா? தற்கொலையா?

kaleelrahman

மதுரை மத்திய சிறையில் இருந்த கொலை வழக்கு கைதி உயிரிழப்பு. உயிரிழப்புக்கான காரணம் நெஞ்சுவலியா தற்கொலையா என நீதிபதி விசாரணை செய்து வருகிறார்.

மதுரையில் கடந்த 2019ஆம் ஆண்டு நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் நடந்த கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மதுரை வடபழஞ்சி அம்பேத்கர் காலனியை சேர்ந்த திருப்பதி. இவர் இந்த குற்றவழக்கின் கீழ் மதுரை மத்திய சிறையில் சிறைவாசியாக தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

நெஞ்சுவலியின் வீரியம் அதிகரித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, செல்லும் வழியிலயே அவர் உயிரிழந்தார், இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டு நீதிபதி விசாரணைக்கு பின்பு உடற்கூராய்வு தொடங்கவுள்ளது.

சிறைவாசி தற்கொலை செய்து உயிரிழந்தாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் சிறை நிர்வாகம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.