டிரெண்டிங்

ஜெ. கைரேகை: பெங்களூரு சிறை அதிகாரி ஆஜராக உத்தரவு

ஜெ. கைரேகை: பெங்களூரு சிறை அதிகாரி ஆஜராக உத்தரவு

rajakannan

ஜெயலலிதா கைரேகை வழக்கில் டிசம்பர் 8-ம் தேதி பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதில் மோசடி செய்துள்ளதாக கூறி தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. அந்த சம்மனில், ஜெயலலிதா சிறை சென்ற போது எடுக்கப்பட்ட கைரேகை உள்ளிட்ட ஆவணங்களை டிசம்பர் 8-ம் தேதி நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆதாரில் உள்ள கைரேகையுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக, ஜெயலலிதாவின் ஆதார் விவரங்களை மத்திய அரசின் உரிய துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தவிட்டனர்.