அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதலமைச்சர் பழனிசாமியை நாளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் மதுசூதனன். இருந்தாலும் இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறவில்லை. அதிமுகவில் மிக மூத்த தலைவராக கருதப்பட்ட மதுசூதனன், இன்று திடீரென துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் வேலுமணியை இன்று சந்தித்து பேசினார். சென்னையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நாளை முதலமைச்சர் பழனிசாமியையும் மதுசூதனன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அண்மையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மீனவ கூட்டுறவு சங்க தேர்தலின் போது ஜெயக்குமார் மற்றும் மதுசூதனன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்சிக்குள் நிலவிய பிரச்னை காரணமாக மதுசூதனன் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை மதுசூதன் நாளை சந்திக்க இருக்கிறார். எனவே முக்கிய முடிவு குறித்து மசூதனன் நாளை அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.