டிரெண்டிங்

ஆர்.கே. நகரில் அதிமுக சார்பாக 40,000 போலி வாக்காளர்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆர்.கே. நகரில் அதிமுக சார்பாக 40,000 போலி வாக்காளர்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

webteam

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் அதிமுகவினரால் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இடைத்தேர்தல் நடைபெறவேண்டிய ஆர்.கே. நகர் தொகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்களர்கள் அதிமுகவின் சார்பில் சேர்க்கப்பட்டுள்ள செய்திகள் தொடர்பாக, ஆதாரங்களோடு திமுகவின் சார்பில், தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை அந்த போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே போலி வாக்காளர்களை உடனடியாக நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.