டிரெண்டிங்

காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்ட நாட்கள் ஆட்சி: மோடி சாதனை!

sharpana

இந்தியாவின் பிரதமர்களாக காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்தவர்கள்தான் நீண்டநாட்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்தியாவின் விடுதலைக்குப்பிறகு முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகளும் அவரது மகள் இந்திராகாந்தி 11 ஆண்டுகளும் பதவி வகித்திருக்கிறார்கள். அதற்கடுத்ததாக, மன்மோகன்சிங் 10 வருடங்கள் ஆட்சிசெய்தார். இப்படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் நீண்ட நாட்கள் இந்தியாவை ஆட்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால், காங்கிரஸ் அல்லாத தலைவர்களான மொரார்ஜி தேசாய், சரண்சிங், விஸ்வநாத் பிரதாப்சிங், சந்திரசேகர், தேவகவுடா , ஐ.கே. குஜரால் உள்ளிட்ட தலைவர்கள் சில ஆண்டுகள்தான் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமரான மோடி  6 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிசெய்துவருகிறார்.

இதுவரை, பா.ஜ.கவில் பிரதமர் பதவியை வகித்தவர்கள் இத்தனை வருடங்கள் தொடர்ந்ததில்லை. ஆனால், பிரதமர் மோடி அந்த சாதனையை படைத்துள்ளார் மோடி. அதுமட்டுமல்ல, மூன்று முறை குஜராத் முதல்வராக பதவி வகித்தும் சாதனை படைத்துள்ளார்.