டிரெண்டிங்

தமிழகம், புதுச்சேரிக்கு ஏப்.18இல் மக்களவை தேர்தல்

தமிழகம், புதுச்சேரிக்கு ஏப்.18இல் மக்களவை தேர்தல்

rajakannan

தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. 

17வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார். இதில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தமிழகம், புதுச்சேரிக்கு வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுகள் அனைத்து முடிவடைந்து மே 23இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 

தமிழகத்திற்கான முக்கிய நாட்கள்:-

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் - மார்ச் 19
வேட்புமனு தாக்குதலுக்கு கடைசி நாள் மார்ச் 26
வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 27
மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 29

வாக்குப் பதிவு - ஏப்ரல் 18

தேர்தல் கட்டங்களின் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் மாநிலங்கள் எண்ணிக்கை:

1ஆம் கட்ட தேர்தல் 91 தொகுதிகள் - 20 மாநிலங்கள்
2ஆம் கட்ட தேர்தல் 97 தொகுதிகள் - 13 மாநிலங்கள்
3ஆம் கட்ட தேர்தல் 150 தொகுதிகள் - 14 மாநிலங்கள்
4ஆம் கட்ட தேர்தல் 71 தொகுதிகள் - 9 மாநிலங்கள்
5ஆம் கட்ட தேர்தல் 51 தொகுதிகள் - 7 மாநிலங்கள்
6ஆம் கட்ட தேர்தல் 59 தொகுதிகள் - 7 மாநிலங்கள்
7ஆம் கட்ட தேர்தல் 59 தொகுதிகள் - 8 மாநிலங்கள்

7 கட்ட தேர்தல் தேதிகள் :

1ஆம் கட்ட தேர்தல் - 11, ஏப்ரல்
2ஆம் கட்ட தேர்தல் - 18, ஏப்ரல்
3ஆம் கட்ட தேர்தல் - 23, ஏப்ரல்
4ஆம் கட்ட தேர்தல் - 29, ஏப்ரல்
5ஆம் கட்ட தேர்தல் - 6, மே
6ஆம் கட்ட தேர்தல் - 12, மே
7ஆம் கட்ட தேர்தல் - 19, மே

அனைத்து கட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 23, மே