தன்னுடைய வாக்கினை செலுத்தாமல் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு திக்விஜய் சிங் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நேற்று 6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தன்னுடைய தொகுதியில் வாக்களிக்கவில்லை. தான் போட்டியிடும் போபால் நகரில் நேற்று முழுவதும் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். திக்விஜய் சிங் தன்னுடைய வாக்கினை செலுத்தாததை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையில், , “திக்விஜய் சிங் வாக்களிக்காதது, காங்கிரஸ் கட்சியில் ஆணவத்தையே காட்டுகிறது. நான் அகமதாபாத் சென்று என்னுடைய வாக்கினை செலுத்தினேன். குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை செலுத்தினார்கள். ஆனால், திக்விஜய் சிங்கிற்கு ஜனநாயகத்தைப் பற்றி கவலையில்லை. எப்பொழுதும் அவர் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். போபால் தொகுதியில் வெற்றி பெறுவதிலேயே குறிக்கோளாய் இருந்துள்ளார்.
முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு திக்விஜய் சிங் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். ரைகார்க் சென்று வாக்களிப்பதில் அவருக்கு என்ன பயம்?”