டிரெண்டிங்

மக்களவைத் தேர்தல்: எஸ்டிபிஐ சார்பில் மத்திய சென்னையில் தெஹ்லான் பாகவி போட்டி

மக்களவைத் தேர்தல்: எஸ்டிபிஐ சார்பில் மத்திய சென்னையில் தெஹ்லான் பாகவி போட்டி

Rasus

அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார்

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலோடு, 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. திமுக, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய சென்னை தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தெஹ்லான் பாகவி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அமமுக முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டிருந்தார். அதன்படி  24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் முதற்கட்டமாக 9 பேர் கொண்ட பட்டியலையும் அமமுக சார்பில் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.