டிரெண்டிங்

நிதிஷ் குமார் மீது அதிருப்தி.. பீகாரில் தனித்து தேர்தலை சந்திக்க லோக் ஜனசக்தி முடிவு

EllusamyKarthik

மூன்று கட்டங்களாக இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட லோக் ஜனசக்தி கட்சி முடிவு செய்துள்ளது.

இன்று டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது பீகாரை ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு எதிராக லோக் ஜனசக்தி வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது.


இந்த முடிவால் பீகாரில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகி உள்ளது லோக் ஜனசக்தி.


அதே நேரத்தில் தேசிய அளவில் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி.
பீகார் மாநில முன்னேற்றத்திற்காக கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத கூட்டணி கட்சி தலைவரும், பீகார் முதல்வருமான நித்திஷ் குமார் மீதான அதிருப்தியின் காரணமாக கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவித்துள்ளார் லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான்.