விஜய் எக்ஸ் தளம்
LIVE UPDATES

திருச்சிக்கு வந்த விஜய்.. தொண்டர்கள் உற்சாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று திருச்சி வந்தடைந்தார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.y

PT WEB

விஜய் உரை

விஜய் பேசுகையில், "திருச்சியில் தொடங்கிய எல்லாம் திருப்புமுனையாக அமையுமென சொல்வார்கள். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அண்ணா தேர்தலில் நிற்கவேண்டுமென நினைத்தது திருச்சியில்தாந். எம்ஜிஆர் தனது முதல் மாநில மாநாட்டை நடத்தியது திருச்சியில்தான். அப்படி திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது.

சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் விஜய்

4 மணிநேரத்திற்கு பிறகு பரப்புரை நடக்கும் இடமான மரக்கடை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றவிருக்கிறார்.

மரக்கடை பகுதியில் மின்தடை

தவெக தொண்டர்கள் அனுமதியின்றி ஆபத்தான முறையில் வீடுகளின் மேற்கூரைகளில் ஏறியுள்ள நிலையில், மரக்கடை பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

மரக்கடை வந்தடைந்தார் விஜய்

பரப்புரை நடைபெறும் இடமான மரக்கடைக்கு, திருச்சி விமானநிலையத்திலிருந்து சுமார் 4 மணிநேர பயணத்திற்குப் பின் வந்தடைந்தார் விஜய்

"நாங்கள் வேண்டுமென்று பரப்புரைக்கு தாமதமாக செல்லவில்லை"- தவெக கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்

தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு, கண்டிப்பாக 2026ல் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும். நாங்கள் வேண்டுமென்று பரப்புரைக்கு தாமதமாக செல்லவில்லை; மக்கள் வெள்ளம் அப்படி இருக்கிறது; காவல்துறை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம் - தவெக கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்

செய்யவில்லைஇன்னும் 850 மீட்டர்களே உள்ளன

விஜய் பரப்புரை நடக்கும் இடமான மரக்கடைக்கு வர தொடர்ந்து தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், பரப்புரை நடக்கும் இடத்திற்கு தவெக தலைவர் விஜய் வந்துசேர இன்னும் 850 மீட்டர்களே உள்ளன.

வேல், பெரியார் படம் போன்றவை விஜய்க்குப் பரிசு

தவெக தலைவர் விஜய் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு வந்து சேர தாமதமாகி வரும் நிலையில், விஜய்க்கு தவெக தொண்டர்கள் வேல், பெரியார் படம், பாசிமாலை மற்றும் தவெக கட்சித் துண்டுகள் போன்றவற்றை பரிசுகளாக வழங்கி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பரிசுப் பொருட்களை வாகனத்தில் இருந்தபடியே அதனை வாங்கிக்கொண்டு வருகிறார்.

"நாங்கள் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை"-ராஜ்மோகன்

மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி திமுக இல்லை என்றும் திமுக என்னும் இரும்புக்கோட்டையை எந்த கொம்பனாலும் தொடமுடியாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் வெளியிட்டிருக்கும் நிலையில், அதற்கு பதிலளித்துள்ள தவெக கொள்கை பரப்புச்செயலாளர் ராஜ்மோகன், “எஃகு கோட்டையோ, இரும்புக் கோட்டையோ, மலைக் கோட்டையோ... அந்தக் கோட்டையில் ஓட்டை போடுவதில் எங்கள் தலைவர் விஜய் ஸ்பெஷலிஸ்ட்; நாங்கள் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை; இது, தன் எழுச்சியாக வரும் கூட்டம்” என தெரிவித்துள்ளார்.

''விஜயோட இந்த கூட்டத்தைப் பார்த்து நிறைய பேர் பொறாமைப்படுவாங்க''- டி.என்.ரகு

முதல் தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் 

தேர்தல் பரப்புரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய்க்கு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் வருகை தாமதமாவதால் கலைந்து செல்லும் தொண்டர்கள்

திருச்சி கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் 6 மயக்கமடைந்த நிலையில், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

"2026-ல் விஜய் தான் முதலமைச்சர்!" - மகளிர் அணி பேட்டி

காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் வீடுகள் மீது ஏறும் தவெக தொண்டர்கள்

தொண்டர்கள் கூட்டத்தில் ஊர்ந்து செல்லும் விஜயின் வாகனம்

விஜயை பின்தொடர்ந்த தொண்டர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை

தவெக தலைவர் விஜய்க்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை முன் 10.30 முதல் 11.00 மணிவரை உரையாற்ற அனுமதியளிக்கப்பட்டிருந்தது.  தொண்டர்கள் கூட்டத்தால் குறித்த நேரத்துக்கு விஜய் பரப்புரை நடக்கும் இடத்துக்கு செல்ல முடியாத நிலையில், அனுமதியளிக்கப்பட்ட நேரத்தை கடந்து பரப்புரை செய்தால் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு.

விஜயை பார்க்க தொண்டர்கள் குவிந்ததால் குறித்த நேரத்தில் பரப்புரை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனம் திருச்சி விமான நிலையத்தைவிட்டு நகர முடியாத அளவுக்கு சூழ்ந்த தொண்டர்கள்

தேர்தல் பரப்புரை வாகனத்தில் தவெக தலைவர் விஜய்

விஜயை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்

விஜயை விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று திருச்சி வந்தடைந்தார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்

திருச்சி வந்தடைந்தார்