தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில், 3 நாட்கள் ட்ரோன் பயிற்சி வழக்கப்படவுள்ளது. வரும் 09.09.2025 முதல் 11.09.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் விமானம் இயக்கும் அடிப்படைகள் குறித்த கண்ணோட்டம் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரம் மற்றும் முன்பதிவு செய்ய விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 9543773337 / 9360221280 என்ற எண்களை தொடர்புக் கொள்ளலாம். பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு அரசு சான்றிதழும் வழங்கப்படும்.
இன்ஸ்டாகிராமை திறந்தாலே கலர் கலரா ரீல்ஸ் தாங்க எல்லாருடைய கண்ணுக்கும் படும். குறிப்பாக இப்ப இருக்குற இளம் தலைமுறையைக் கவர்வது மாதிரி ட்ரெண்டிங் பாட்டுக்கு டான்ஸ், இந்த புடவை நான் எங்க எடுத்தேன் தெரியுமா?, 50 ரூபாய்க்கு சுடச்சுட பிரியாணி எங்க கிடைக்குன்னு பார்க்கலாமான்னு விதவிதமா வியூவர்ஸைக் கவர்றதுக்காக வீடியோக்கள் பண்றதை வழக்கமாகிடுச்சி.
அதனால் தான் இன்ஸ்டாகிராம் மாதிரியான சோசியல் மீடியாவில் அரசியல் பேசுபவர்களுடைய எண்ணிக்கைகள் குறைவாகவும், நல்ல அரசியலையும் நையாண்டி செய்பவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகவும் மாறிட்டு இருக்கு. இந்த சமயத்தில் தான் சில இளம் தலைமுறையினர் நம்ப பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக கொண்டு வந்திருக்குற நலத்திட்டங்கள் குறித்து விரிவாகவும், வேகமாகவும் எடுத்துரைக்கும் விதமா வீடியோக்களை வெளியிட்டுக்கிட்டு வர்றாங்க.
அதிலும் குறிப்பாக ஜி.பிரதீப் மற்றும் ஜீவிதா என்கிற இரண்டு பேரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், அதனால் சாமானிய மனிதர்கள் எப்படி பயன்பெற முடியும் என்பது குறித்தும் தெளிவாக விளக்கமளித்து வருகின்றனர்.
ரூ.3 லட்சம் கடன் பெற்றால், ரூ.2 லட்சம் மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும், உத்யோகினி யோஜனாவின் அப்படிங்கிற பெண்களுக்கான திட்டங்கள், தனியார் பள்ளிகளில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் இலவச கல்வி பெறுவது எப்படி?, மானியத்துடன் கல்வி கடன் பெறுவது எப்படி?, டாக்டர் பீஸ் இல்லாம மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச ஆலோசனை பெறுவது எப்படி?, விவசாயிகளுக்கான கடன்கள், மானியங்கள் என்னென்ன? அப்படின்னு ஜி.பிரதீப் மற்றும் ஜீவிதா ப்ரியா அப்படிங்கிற இரண்டு இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்ஸும் வீடியோ வெளியிட்டு வர்றாங்க.
இதுமட்டும் இல்லீங்க ஜிஎஸ்டி குறைப்பால் எந்தெந்த பொருட்களோட விலைகள் குறையும், டிரம்ப் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசோட நடவடிக்கைகள் என்ன, எந்தெந்த துறைகளை மேம்படுத்த மத்திய அரசு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கியிருக்காங்க மாதிரியான மக்களை சென்று சேர வேண்டிய ஆக்கப்பூர்வமான விஷயங்களையும், சாமானியர்களுக்கும் புரிகின்ற வகையில் எளிமையாக விளக்குகிறார்கள். இதனால் இவர்களோட இன்ஸ்டாகிராம் வீடியோஸுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் அண்ட் ஷேர் குவிச்சிக்கிட்டு வருவதுடன், அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
உங்களுக்கு இந்த மாதிரியான பயனுள்ள தகவல்கள் வேணுன்னா @gpradeepbjp மற்றும் @vision_of_jeevitha அப்படிங்கிற இந்த ரெண்டு இண்ஸ்டாகிராம் பேஸை பாலோப் பண்ணிக்கோங்க.