கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே செயல்பட்டு வரும் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் (RCET), மாணவர்களின் அறிவுத்திறன், படைப்பாற்றல், கலாசாரம் மற்றும் தொழில்முனைவுத் திறமைகளை ஒரே தளத்தில் இணைக்கும் ‘SPECTRA 2026’ விழா மிகச் சிறப்பாகத் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான விழாவைக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ரோகிணி பொறியியல் கல்லூரி, தேசிய அளவில் தரமான பொறியியல் கல்வியை வழங்கி வருகிறது. இக்கல்லூரி NAAC மதிப்பீட்டில் ‘A+’ தரச்சான்றிதழ், முன்னணி இளநிலைப் படிப்புகளுக்கான NBA அங்கீகாரம் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு முதன்மை விருதுகளையும் பெற்றுத் திகழ்கிறது. குறிப்பாக, 2025–26 நடப்புக் கல்வியாண்டில் வளாக வேலைவாய்ப்பில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 57-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மூலம் 667 வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, பல்வேறு துறைகளைச் சார்ந்த 511 மாணவ, மாணவிகளுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான பயிற்சி, வழிகாட்டுதல், தொழில் ஆலோசனை, இன்டர்ன்ஷிப், திட்ட அடிப்படையிலான கற்றல் மற்றும் தொழில் நிறுவனங்களுடனான தொடர்பு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் பலனாக இந்த வேலைவாய்ப்பு சாதனை அமைந்துள்ளது. வருங்காலத் தொழில்நுட்ப சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் அமைந்த தளம். இதில் ஹேக்கத்தான் (Hackathon), AI ஐடியாத்தான் (AI Ideathon), ப்ராம்ப்ட் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ் மற்றும் 'Mega Technical Challenge 2026' ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் பரிசோதிக்கப்பட்டது.
NAAC ‘A+’ அங்கீகாரம் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தில் 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட RCET, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, AICTE அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. NAAC மதிப்பீட்டில் 4-க்கு 3.46 CGPA பெற்று ‘A+’ அங்கீகாரத்தையும், முக்கிய இளநிலைப் படிப்புகளுக்கு NBA அங்கீகாரத்தையும் கல்லூரி பெற்றுள்ளது. சரோஜா கல்விக் குழுமத்தின் தலைவர் கே. நீல மார்த்தாண்டன் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், துணைத் தலைவர் டாக்டர் என். நீல விஷ்ணு, நிர்வாக இயக்குநர் டாக்டர் வி.எம். பிளஸ்ஸி ஜியோ மற்றும் முதல்வர் டாக்டர் ஆர். ராஜேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்புகள், கிளப்புகள் மற்றும் தொழில்முறை சங்கங்களின் மாணவர் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தொழில்நுட்ப அறிவுடன் படைப்பாற்றல், தகவல் தொடர்பு, தலைமைத்துவம் மற்றும் குழுவாகச் செயல்படும் திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. 70-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கல்லூரியில் பணியாற்றுகின்றனர்.
Honours மற்றும் Minor Degree படிப்புகள், ஆராய்ச்சி, புதுமை முயற்சிகள் மற்றும் தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளிலும் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர். மாணவர்களின் தொழில்முனைவுத் திறனை வளர்க்கும் ஒரு நடைமுறை களம். இதில் மாணவர்கள் உணவக அரங்குகளை அமைத்து, வணிகத் திட்டமிடல், பிராண்டிங், சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் நிர்வாகம் போன்ற வணிக உத்திகளை நேரடியாகச் செயல்படுத்திக் கற்றறிந்தனர். மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வண்ணமயமான தளம். இதில் மேற்கத்திய நடனம், குழு நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொழில்நுட்பம், வணிகம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கலைத்திறன் ஆகிய அனைத்தையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்த இந்த ‘SPECTRA 2026’ விழா, மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பு, குழுப்பணி மற்றும் நிஜ வாழ்க்கைச் சிக்கல்களுக்கு நடைமுறைத் தீர்வு காணும் உத்திகளை வலுப்படுத்தி, எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது.