ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக மெகா ஐபிஎல் ஏலம் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஐபிஎல் 2025 மெகா சீசனுக்கான ஏலம் சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் நேற்று (நவ.24) தொடங்கியது. இதில் பங்கேற்கும் 10 அணிகளில், முதல் நாள் ஏலத்தில் 467 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு, 72 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதையடுத்து, இன்று தொடங்கி ஏலம் நடைபெற்றுவருகிறது.
இரண்டாம் நாள் ஏலம் தொடக்கத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் பல ஸ்டார் வீரர்கள் UNSOLDஆக சென்றுள்ளனர்.
விற்கப்படாத வீரர்கள்:
1. பிரித்வி ஷா
2. ஷர்துல் தாக்கூர்
3. அஜிங்கியா ரஹானே
4. கேன் வில்லியம்சன்
5. க்ளென் பிலிப்ஸ்
6. மயங்க் அகர்வால்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ரோவ்மன் பவல் ரூ.1.50 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த தென்னாப்பிரிக்க வீரர் ஃபேஃப் டூபிளசி ரூ.2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் வளர்ந்துவரும் ஆல்ரவுண்டர் வீரரான வாசிங்டன் சுந்தர் அதிக விலைக்கு செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், லக்னோ மற்றும் குஜராத் அணிகள் போட்டிப்போட்டன.
இரண்டு அணிகளும் போட்டிப்போட்ட நிலையில் இறுதியாக ரூ.3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் சாம் கர்ரன், மீண்டும் சிஎஸ்கே அணியால் ரூ.2.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ யான்சன், இரண்டாவது நாள் ஏலத்தின் அதிகப்படியான விலைக்கு சென்றுள்ளார்.
இவருக்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டிப்போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி போட்டிப்போட்டது. கடைசி பிட்டாக 7 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தட்டிச்சென்றது.
மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படக்கூடிய டேரில் மிட்செல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடிக்கு அணியில் எடுத்தது. ஆனால் 2025 ஐபிஎல் தொடரில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.
பவுலிங் ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியாவை ஆர்சிபி அணி ரூ.5.75 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையே போட்டி நிலவிய நிலையில், ஆர்சிபி அணி இறுதியாக தட்டிச்சென்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை வீரரான சாய் ஹோப் UNSOLDஆக சென்றுள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டர் வீரரான நிதிஷ் ரானாவிற்கு சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டிப்போட்டன, இடையில் வந்த ஆர்சிபி அணி இறுதி ஏலம் வரை போட்டிப்போட்டது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.4.20 கோடிக்கு தட்டிச்சென்றது.
தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரியான் ரிக்கல்டன் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஸ் இங்கிலிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.2.60 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் 18 கோடி, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 11கோடி என பஞ்சாப் கிங்ஸ் பெரிய பிட்களை எடுத்துள்ளது. க்ளென் மேக்ஸ்வெல் 4.20 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இந்தியாவின் கேஎஸ் பரத், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி மற்றும் தென்னாப்பிரிக்காவின் பெர்ராரி UNSOLDஆக சென்றுள்ளனர்.
2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை பந்துவீச்சாளராக இருந்த துஷார் தேஸ்பாண்டே ராஜஸ்தான் அணிக்கு சென்றுள்ளார்.
சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவிய நிலையில் ரூ.6.25 கோடி வரை வந்து சிஎஸ்கே பின் வாங்கியது. முடிவில் ரூ.6.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தட்டிச்சென்றது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய தென்னாப்பிரிக்க பவுலர் ஜெரால்ட் கோட்ஸீ, 2025 ஐபிஎல் தொடரில் ரூ.2.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
ஓப்பனிங் ஓவர்களில் ஸ்விங் செய்யக்கூடியவரும், டெத் ஓவர்களில் சிறப்பாக யார்க்கர் வீசக்கூடிய பவுலருமான புவனேஷ்வர் குமாருக்கு நீண்டநேர போட்டி நடந்தது.
தொடக்கத்திலிருந்து மும்பை மற்றும் லக்னோ அணிகள் போட்டிப்போட்ட நிலையில், 10.25 கோடிவரை வந்து மும்பை இந்தியன்ஸ் அணி பின்வாங்கியது. ரூ.10.50 கோடிக்கு லக்னோ அணி சீல் செய்த நிலையில், கடைசியா உள்ளேவந்த ஆர்சிபி அணி 10.75 கோடிக்கு புவனேஷ்வர் குமாரை தட்டிச்சென்றது.
இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யக்கூடியவரும், முதல் 6 ஓவர்களில் ஓப்பனிங் விக்கெட்டை கைப்பற்றக்கூடியவருமான வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி சென்றது.
7.50 கோடி வரை வந்து பஞ்சாப் கிங்ஸ் பின்வாங்கிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளே வந்தது. 9 கோடிவரை சென்ற சிஎஸ்கே அணி கைவிட்ட நிலையில், தீபக் சாஹரை 9.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது.
ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளரை அணிக்குள் எடுக்க போராடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, முகேஷ் குமார், தீபக் சாஹரை தொடர்ந்து ஆகாஷ் தீப்-க்கும் இறுதிவரை போராடியது. ஆனால் இறுதிவரை விட்டுக்கொடுக்காத லக்னோ அணி ரூ.8 கோடிக்கு ஆகாஷ் தீப்பை தட்டிச்சென்றது.
இந்திய பவுலர்களான முகேஷ் குமார், ஆகாஷ் தீப் மற்றும் தீபக் சாஹருக்கு சென்று கிடைக்காத நிலையில், மற்றொரு வேகப்பந்துவீச்சாளருக்கு காத்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு லாக்கி பெர்குசனை எடுத்தது.
ஆப்கானிஸ்தானின் 18 வயது இளம் ஸ்பின்னரான அல்லாஹ் கசன்ஃபருக்கு ஆர்சிபி, கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடுமையாக போட்டிப்போட்டன.
75 லட்சம் அடிப்படை விலையிலிருந்த அவரை ரூ.4.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.
தேசிய அணிகளில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டார் ஸ்பின்னர்களான,
1. கேசவ் மஹாராஜ்
2. முஜூப் உர் ரஹ்மான்
3. அடில் ரசீத்
முதலிய வீரர்கள் விற்கப்படவில்லை.
இந்திய பேட்ஸ்மேனான ஷுபம் துபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.80 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
இந்திய இளம் பேட்ஸ்மேனான ஷைக் ரசீத்தை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு சிஎஸ்கே விலைக்கு வாங்கியுள்ளது.
ஆல்ரவுண்டர் வீரரான அன்ஷுல் கம்போஜ்-க்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் போட்டிப்போட்டன. ஆனால் இறுதியில் ரூ.3.40 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது.
அதேபோல இளம் இந்திய பந்துவீச்சாளரான முகேஷ் சௌத்ரியை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு சிஎஸ்கே விலைக்கு வாங்கியுள்ளது.
இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ஸ்வப்னில் சிங்கை 50 லட்சத்துக்கு ஆர்சிபி அணி ஆர்டிஎம் மூலம் தக்கவைத்துக்கொண்டது.
இந்திய ஆல்ரவுண்டர் தர்சன் நல்கண்டே ரூ.30 லட்சத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
அதேபோல மற்றொரு இந்திய ஆல்ரவுண்டர் அர்ஷத் கான் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.1.30 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இந்திய பவுலர் குர்னோர் பிராருக்கு சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் போட்டிப்போட்ட நிலையில், குஜராத் அணி 1.30 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
இந்திய இளம் பேட்ஸ்மேனான ஹிம்மத் சிங்கை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு லக்னோ வாங்கியுள்ளது.
இந்தியாவின் இளம் ஸ்பின்னர்களான ஷீசம் அன்சாரியை சன்ரைசர்ஸ் அணி ரூ.40 லட்சத்துக்கும், மணிமாறன் சித்தார்த்தை லக்னோ அணி 75 லட்சத்துக்கும், திக்வேஷ் சிங்கை லக்னொ அணி 30 லட்சத்துக்கும் விலைக்கு வாங்கியுள்ளது.
வெளிநாட்டு வீரர்களான பென் டக்கெட், டெவால்ட் பிரேவிஸ், ஃபின்ஆலன் UNSOLDஆக சென்றுள்ளனர்.
இந்திய பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே அடிப்படை விலையான 75 லட்சத்துக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டரான டிம் டேவிட் ஆர்சிபி அணியால் 3 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஷெர்பேன் ரூதர்போர்டு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.2.60 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணியில் விளையாடிய மொயின் அலி 2025 ஐபிஎல் தொடரில் விலைக்கு வாங்கப்படவில்லை..
இந்திய ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது லக்னோ அணியால் 2.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்காக டி20 சதமடித்தவரான தீபக் ஹுடாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.70 கோடிக்கு வாங்கியுள்ளது.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் சிறந்த பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ், 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். முக்கியமாக ஆர்சிபி அணி அவருக்கான ஏலத்திற்கே செல்லவில்லை.
ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் வீரரான அஷ்மதுல்லா ஓமர்சாய் ஏலத்திற்கு சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் போட்டி போட்டன. முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2.40 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
சாய் கிஷோருக்கு பஞ்சாப் கிங்ஸ் 2 கோடிவரை சென்ற நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி ஆர்டிஎம் மூலம் தக்கவைத்தது.
கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ரொமாரியோ ஷெப்பர்ட் அடிப்படை விலையான ரூ.1.50 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஷ்தஃபிசூர் ரஹ்மான் யாராலும் வாங்கப்படவில்லை.
அதேபோல இந்திய வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கும் வாங்கப்படவில்லை.
உடன் விராட் கோலி புகழ் நவீன் உல் ஹக் மற்றும் உமேஷ் யாதவ் முதலியோரும் UNSOLDஆக சென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் 2.80 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மூத்த வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா அடிப்படை விலையான ரூ.75 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை வேகப்பந்துவீச்சாளரான நுவன் துஷாரா 1.60 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளரான ஜெயதேவ் உனாத்கட் அடிப்படை விலையான 1 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கபட்டுள்ளார்.
இந்திய இளம் பேட்ஸ்மேன் ஹர்னூர் சிங் அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
மற்றொரு வீரரான ஆந்த்ரே சித்தார்த் விலைக்கு வாங்கப்படவில்லை.
இந்திய ஆல்ரவுண்டர் யுத்விர் சிங் ரூ.35 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணியாலும், இந்திய பவுலர் அஷ்வானி குமார் ரூ.30 லட்சத்துக்கு MI அணியாலும், மற்றொரு இந்திய பவுலர் ஆகாஷ் சிங் ரூ.30 லட்சத்துக்கு லக்னோ அணியாலும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங் சிஎஸ்கே அணியால் ரூ.2.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
பல ஸ்டார் வீரர்கள் விலைக்கு வாங்கப்படாமல் போயுள்ளனர்.
அந்தப்பட்டியலில்,
1. சர்பராஸ் கான்
2. ஸ்டீவ் ஸ்மித்
3. கைல் மேயர்ஸ்
4. சிக்கந்தர் ராசா
5. பதும் நிஷாங்கா
6. பிரண்டன் கிங்
7. கஸ் அட்கின்ஸன்
8. மாபாகா
9. அல்சாரி ஜோசப்
முதலிய வீரர்கள் விற்கப்படவில்லை.
சிஎஸ்கே அணியில் இருந்த மிட்செல் சாண்ட்னர் 2024 ஐபிஎல் தொடரில் ரூ.2 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவ் அடிப்படை விலையான 75 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யக்கூடிய ஆப்கானிஸ்தான் பவுலர் ஃபசல்ஹக் பரூக்கியை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது.
இந்திய பவுலர் குல்தீப் சென் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.80 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருந்த ரீஸ் டோப்ளேவை மும்பை இந்தியன்ஸ் அணி 75 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
இந்திய ஆல்ரவுண்டர் பிரியன்ஸ் ஆர்யா பஞ்சாப் கிங்ஸ் அணியால் 3.80 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவர் டிஎன்பிஎல் லீக் தொடரில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்திருந்தார்.
இந்திய ஆல்ரவுண்டரான மனோஜ் பந்தேஜ் ஆர்சிபி அணியால் 30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
மற்றொரு இந்திய ஆல்ரவுண்டரான விப்ரஜ் நிகம் 50 லட்சத்துக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் கிருஷ்ணன் ஸ்ரீஜித் மும்பை அணியால் 30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரான ஆரோன் ஹார்டியை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.1.25 கோடிக்கு வாங்கியுள்ளது.
அதேபோல இங்கிலாந்து ஆல்ரவுண்டர்களான பிரைடன் கார்ஸை 1 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியும், ஜாக்கப் பெத்தலை 2.60 கோடிக்கு ஆர்சிபி அணியும் வாங்கியுள்ளது.
இலங்கை ஆல்ரவுண்டர் கமிந்து மெண்டீஸ் 75 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை பவுலரான துஷ்மந்த சமீரா 75 லட்சத்துக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா வீரர்களான மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேசன் பெஹண்ட்ராஃப் இருவரும் விற்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய பவுலரான நாதன் எல்லீஸ் சிஎஸ்கே அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் 75 லட்சத்துக்கு லக்னோ அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான நவ்தீப் சைனி, ஷிவம் மாவி மற்றும் இந்திய பேட்ஸ்மேன் சல்மான் நிசார் ஆகியோர் வாங்கப்படவில்லை.
அண்ணன் சர்பராஸ் கான் விற்கப்படாத நிலையில், அவரின் தம்பியான முஷீர் கான் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன் அனிகேத் வர்மாவை சன்ரைசர்ஸ் அணி 30 லட்சத்துக்கும், இந்திய ஆல்ரவுண்டர் ராஜ்பவாவை மும்பை அணி 30 லட்சத்துக்கும் வாங்கியுள்ளது.
இந்திய ஆல்ரவுண்டர் சூர்யன்ஸ் ஷெட்ஜ் 30 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும், இந்திய பவுலரான பிரின்ஸ் யாதவ் 30 லட்சத்துக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து ஆல்ரவுண்டரான ஜேமி ஓவர்டனை சிஎஸ்கே அணி 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா பவுலர் ஷேவியர் பார்ட்லெட் 80 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் மதுஷங்கா, தென்னாப்பிரிக்கா லுங்கி இங்கிடி, இந்தியாவின் சக்காரியா, சந்தீப் வாரியர் முதலிய வீரர்கள் வாங்கப்படவில்லை.
இந்திய ஆல்ரவுண்டர்கள் கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஸ் சிஎஸ்கே அணியால் 30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சௌத்ரி லக்னோ அணியால் 30 லட்சத்துக்கும், இந்திய பேட்ஸ்மேன் பில அவினாஷ் பஞ்சாப் அணியால் 30 லட்சத்துக்கும், இந்திய பவுலர் சத்யநாராயண ராஜு மும்பை அணியால் 30 லட்சத்துக்கும் வாங்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வீரர்களான தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியஸ், வெஸ்ட் இண்டீஸின் ரோஸ்டன் சேஸ், இங்கிலாந்தின் ஜோர்டன் முதல் வீரர்கள் வாங்கப்படவில்லை.
13 வயது இந்திய பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷியை விலைக்கு வாங்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி போட்டன.
இறுதியில் 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் விலைக்கு வாங்கியது. இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் சதமடித்து அசத்தியிருந்தார்.
இலங்கை வேகப்பந்துவீச்சாளரான எஷான் மலிங்கா சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியால் ரூ.1.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லவ்னித் சிசோடியா கேகேஆர் அணியால் ரூ.30 லட்சத்துக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபால் சிஎஸ்கே அணியால் 30 லட்சத்துக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய பேட்ஸ்மேனான ஆந்த்ரே சித்தார்த் சிஎஸ்கே அணியால் 30 லட்சத்துக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து பேட்ஸ்மேன் க்ளென் பிலிப்ஸ் அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது ரவுண்டில் இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே, இங்கிலாந்து வீரர் மொயின் அலி, இந்திய பவுலர் உம்ரான் மாலிக், இந்திய வீரர் அனுகுல் ராய் முதலிய வீரர்களை எடுத்துள்ளது.
அஜிங்கியா ரஹானே - 2 கோடி
மொயின் அலி - 2 கோடி
உம்ரான் மாலிக் - 75 லட்சம்
அனுகுல் ராய் - 40 லட்சம்
தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் பேட்டர் டோனோவன் பெரீரா டெல்லி கேபிடல்ஸ் அணியால் 75 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் வன்ஷ் பேடி சிஎஸ்கே அணியால் 55 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் 2025 ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு வாங்கப்படவில்லை.
இந்திய பேட்ஸ்மேன் ஸ்வதிக் சிக்காரா ஆர்சிபி அணியால் 30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய பேட்டர் சச்சின் பேபி சன்ரைசர்ஸ் அணியால் 30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டர் வீரர்களான அர்ஷின் குல்கர்னி, ஹங்கர்கேகர் இருவரும் 30 லட்சத்துக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க பேட்டரான மேத்யூ ப்ரீட்ஸ்கி லக்னோ அணியால் 75 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க பவுலரான குவேனா மபாகா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டர்களான அஜய் ஜாதவ் மண்டல், மன்வந்த் குமார் இருவரும் டெல்லி கேபிடல்ஸ் அணியால் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஆல்ரவுண்டரான பிரவீன் துபே பஞ்சாப் கிங்ஸ் அணியால் அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டரான கரிம் ஜனத் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 75 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து பேட்ஸ்மேன் பெவான் ஜேகப்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியால் 30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டர் வீரர்களான திரிபுரன விஜய் மற்றும் மாதவ் திவாரி இருவரும் டெல்லி கேபிடல்ஸ் அணியால் 30, 40 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் குணால் சிங் ரத்தோர் அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இந்திய பவுலர் அர்ஜுன் டெண்டுல்கர், இந்திய ஆல்ரவுண்டர் விக்னேஷ் புதுர் அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க பவுலர் 75 லட்சத்துக்கு மும்பை அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய பவுலர் குல்வந்த் கெஜ்ரோலியா 30 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர் ரஞ்சிக்கோப்பையில் 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பவுலரான அசோக் சர்மா அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி ரூ.1 கோடிக்கு ஆர்சிபி அணியால் விலைக்கு வாங்கப்பட்டார்.
இந்திய பவுலர்களான அபினந்தன் சிங் மற்றும் மோஹித் ரத்தீ இருவரும் அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டுள்ளனர்.