பற்றி எரியும் காஸா
பற்றி எரியும் காஸா Puthiyathalaimurai
LIVE UPDATES

Live updates | இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் | அதிகரிக்கும் பதற்றம்!

Madhalai Aron

ஈரான் உதவியால் ஹமாஸ் இம்மாதிரி செயல்படுகிறது

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். ‘ஆபரேஷன் அல்-அக்‌ஷா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை வீசியது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். சிறிய ரக விமானங்கள், கடல் எனப் பல வழிகளில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். போர் சூழல் மூன்றாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சர்வதேச விவகார ஆய்வாளர் கார்த்திகேயன் புதிய தலைமுறைக்கு தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “ஹமாஸ் நீண்டகாலமாகவே இத்தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. 1950களில் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனாலும் அவர்களுடன் வெளியுறவு ரீதியிலான உறவை வைத்துக்கொண்டது 1992-ஆம் ஆண்டில்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் உருவாக்கிய Iron Dome.. கச்சிதமாக கண்டுபிடித்த hamas | Israel - Palestine Conflict |

யாருடைய உதவியும் தேவையில்லை - இஸ்ரேல்

ஹமாஸ் குழுவினரை எதிர்கொள்ள எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை; எங்கள் போரை நாங்களே நடத்தி கொள்வோம்; பிற நாடுகளின் உதவி தேவையில்லை.

- தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் பேட்டி

Naor Gilon

போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 5% ஏற்றம்
(பிரெண்ட் கச்சா: விலை/ஒரு பீப்பாய்)

அக்டோபர் 2        -  90.71 டாலர்
அக்டோபர் 3        -  91.56 டாலர்
அக்டோபர் 4        -  85.81  டாலர்
அக்டோபர் 5        - 84.07 டாலர்
அக்டோபர் 6       -  84.58 டாலர்
அக்டோபர் 9       -   89 டாலர்

Crude Oil

போர் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை 5% ஏற்றம்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 5% அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89 டாலராக உயர்வு; அக்.6ஆம் தேதி 84.58 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்றைக்கு 89 டாலராக உயர்வு

இஸ்ரேலின் அஷ்கெலோன் நகர் குடியிருப்பு பகுதியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 8 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்

இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய கொடூர தாக்குதலில் 260 பேர் உயிரிழப்பு; ஆங்காங்கே சிதறி கிடந்த 260 பேரின் உடல்களை அரசு சாரா அமைப்பினர் மீட்டுள்ளனர்

Israel-Palestinian conflict

ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் ஆக்கிரமிப்பில் இன்னும் 8 பகுதிகள் இருப்பதால் அனைத்து பகுதிகளும் முழு கட்டுப்பாட்டில் வரும் வரை ஹமாஸ்க்கு எதிரான போர் தொடரும் - இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட குழந்தைகள், முதியவர்களை மீட்க எகிப்து, ஜோர்டான் முயற்சி

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். ‘ஆபரேஷன் அல்-அக்‌ஷா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை வீசியது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். சிறிய ரக விமானங்கள் கடல் எனப் பல வழிகளில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர்.

Israel-Palestinian conflict