Bihar Election Results 2025 - LIVE Updates pt web
LIVE UPDATES

Bihar Election Results - LIVE Updates | 162 இடங்களில் முன்னிலை.. முந்தும் NDA.. துரத்தும் I.N.D.I.A!

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

PT WEB

பீஹாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதி, மாநிலத்தின் மிக முக்கியமான தொகுதியாகும். ஏனெனில், லாலு பிரசாத் யாதவின் மற்றொரு மகனான தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார்.

பிகாரின் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரின் மூத்த மகனான தேஜ் பிரதாப், சில மாதங்களுக்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். நடைபெற இருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலில், மஹுவா தொகுதியில் இருந்து தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் வெற்றி நிலவரம் என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்தத் தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.

2015 இல், தேஜ் பிரதாப் யாதவ் ஆர் ஜே டி சார்பாக இத்தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ராஜ்குமார் ராய்யை 21,139 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். 2020 ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் மஹுவாவில் போட்டியிடாமல், சமஸ்திபூர் மாவட்டத்தின் ஹசன்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனாலும், ஆர்ஜேடி மஹுவா தொகுதியில் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்திருந்தார். ஆனால், இப்போது தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டு தொகுதியில் பின்னடவைச் சந்தித்திருக்கிறார்.

லோக் ஜன்ஷக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சஞ்சய் குமார் சிங் 6,901 வாக்குகள் பெற்று மஹுவா சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். தேஜ் பிரதாப் யாதவ் 1,500 வாக்குகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். ஆர்ஜேடி வேட்பாளர் முகேஷ் குமார் ரௌஷன் 4,607 வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஹாரில் கடந்த சில தேர்தல்களாகவே வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. கடந்த தேர்தலில்கூட ஆட்சி அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியாக அமர்ந்த மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது 12 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி வித்தியாசம் 7%-க்குக் குறைவாக இருந்த 10 தொகுதிகள் இந்த தேர்தலில் மிக முக்கியமாக கவனம் ஈர்க்கக்கூடிய தொகுதிகளாக உள்ளன.

அந்தத் தொகுதிகளில் எந்தக் கட்சி முன்னிலையில் உள்ளது என்பதைப் பார்க்கலாம்...

  • பாஜகParihar, Keoti, Kurhani, Bhabua ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

  • ஆர்ஜேடிMadhubani, Ramgarh, Pranpur ஆகிய மூன்று தொகுதிகளில் முன்னிலை.

  • ஜெடியுKanti தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

  • காங்கிரஸ்Kishanganj தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

கணக்கைத் திறக்காத ஜன் சுராஜ்

காலை 10.25 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 173 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஜன் சுராஜ் கட்சி இதுவரை எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NDA தோற்பதற்கு வாய்ப்பே இல்லை... 

"பிஹார் மாதிரியான ஒரு மாநிலத்தில் 10 ஆயிரம் என்பது மிகப்பெரிய ஒரு தொகை. அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது" - அரசியல் பார்வையாளர் இரா. முருகவேள்

உயர்ந்த நிதிஷ் குமார் செல்வாக்கு!

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், என்.டி.ஏ கூட்டணி 150 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகின்றது. இதில் பாஜக 73 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஜேடியு 69 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

நிதிஷ் குமார்

கடந்த தேர்தலில் பாஜக 74 இடங்களிலும், ஜேடியு 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் சுமார் 25 இடங்களுக்கு மேல் கூடுதலாக வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

காலை 10 மணி நேரப்படி நிலவரம்

2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 159 இடங்கள் - முன்னிலை

இந்தியா கூட்டணி - 80 இடங்கள் - முன்னிலை

ஜன் சுராஜ் கட்சி - 2 இடங்கள் - முன்னிலை

மற்றவை - 2 இடங்கள் - முன்னிலை

என்.டி.ஏ கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை

தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 82 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 70 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன..

“புலிக்கு இன்னும் சக்தி இருக்கு”

தேர்தல் முடிவுகள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக உள்ள நிலையில், முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பாட்னாவில் உள்ள இல்லம் முன்பு “புலிக்கு இன்னும் சக்தி இருக்கு” என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

காலை 9.40 மணி நேரப்படி நிலவரம்

2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 162 இடங்கள் - முன்னிலை

இந்தியா கூட்டணி - 76 இடங்கள் - முன்னிலை

ஜன் சுராஜ் கட்சி - 3 இடங்கள் - முன்னிலை

மற்றவை - 2 இடங்கள் - முன்னிலை

தொடர்ந்து NDA முன்னிலை - பிஹார் தேர்தல் நேரலை

நிச்சயம் வெற்றி பெறுவோம் - காங்கிரஸ் நம்பிக்கை

வாக்கு எண்ணிக்கை நியாயமான முறையில் நடைபெற்றால் நிச்சயம் மகாகத்பந்தன் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்

- பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஸ் ராம்

முன்னிலையில் மெஜாரிட்டியை தாண்டிய என்.டி.ஏ

வெற்றிக்கு தேவையான 122 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி பாஜக 81 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 64 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன..

தாராப்பூர் தொகுதியில் சாம்ராட் சவுத்ரி முன்னிலை!

துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தாராப்பூர் தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.

“சாம்ராட் சவுத்ரியை வெற்றி பெற செய்யுங்கள். தேர்தல் முடிந்ததும், அவரை மிகப்பெரிய ஆளாக மாற்றி உயர்ந்த இடத்தில் பிரதமர் மோடி வைப்பார்” என்று சவுத்ரிக்கு ஆதரவாக அமித்ஷா தேர்தல் பரப்புரையின் போது பேசியிருந்தார்.

காலை 9 மணி நேரப்படி நிலவரம்

2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 131 இடங்கள் - முன்னிலை

இந்தியா கூட்டணி - 88 இடங்கள் - முன்னிலை

ஜன் சுராஜ் கட்சி - 5 இடங்கள் - முன்னிலை

மற்றவை - 6 இடங்கள் - முன்னிலை

தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் முன்னிலை

மகுவா தொகுதியில் தேஜ் பிரதாப் முன்னிலை

பிகாரின் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரின் மூத்த மகனான தேஜ் பிரதாப், சில மாதங்களுக்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். நடைபெற்றுள்ள பிகார் சட்டமன்றத் தேர்தலில், மஹுவா தொகுதியில் இருந்து தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டுள்ளார்.

2025 பிஹார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நேரலை

பீகார் தேர்தல் குறித்து எழுத்தாளர் முருகவேள் உடன் முக்கிய உரையாடல்

அலிநகர் தொகுதியில் பாடகி மைதிலி தாக்கூர் முன்னிலை!

பீகாரின் தர்பங்காவில் உள்ள ஒரு முக்கிய தொகுதியான அலிநகர், கடுமையான தேர்தல் போர்களின் வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தத் தேர்தலில், நாட்டுப்புற பாடகியும் பாஜக கலாச்சார தூதருமான மைதிலி தாக்கூர் (25) தனது அரசியல் பயணத்தை இந்த தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.

மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான மைதிலி, நாட்டுப்புறப் பாடல்களால் பிரபலமானவர். 2017ஆம் ஆண்டில், இளம் பாடகி ரைசிங் ஸ்டார் என்ற பாடல் ரியாலிட்டி ஷோவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவராக முக்கியத்துவம் பெற்றார். 2021ஆம் ஆண்டு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார் விருதையும் பெற்றுள்ளார். மைதிலியின் பிரபலத்தால் மிதிலாஞ்சல் பகுதியில் பாஜகவுக்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என கட்சி நம்புகிறது.

தேஜஸ்வி யாதவ் முன்னிலை

தேஜஸ்வி யாதவ்

தொடக்க நிலவரம் - ராக்கோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலை

காலை 8.45 மணி நேரப்படி நிலவரம்

2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 90 இடங்கள் - முன்னிலை

இந்தியா கூட்டணி - 64 இடங்கள் - முன்னிலை

ஜன் சுராஜ் கட்சி - 4 இடங்கள் - முன்னிலை

மற்றவை - 5 இடங்கள் - முன்னிலை

நாங்கள் வெற்றிபெறப் போகிறோம் -தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவ்

நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அனைவருக்கும் நன்றி.

ஒரு மாற்றம் வரப்போகிறது. நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம்.

- ஆர்.ஜே.டி தலைவரும், இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ்!

பிஹார் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம் #BiharElection2025 | #BiharElection | #BiharElectionResultWithPT

பிஹாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது