டிரெண்டிங்

வரம்பு மீறி செயல்படுகிறார் கிரண் பேடி: நாராயணசாமி குற்றச்சாட்டு!

வரம்பு மீறி செயல்படுகிறார் கிரண் பேடி: நாராயணசாமி குற்றச்சாட்டு!

webteam

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வரம்பு மீறி செயல்படுகிறார் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “டெல்லியில் உள்ள துணைநிலை ஆளுநருக்கும், புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு தனியாக ஒரு சட்டம் 1963 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டுள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு, நிதி நிர்வாகம் ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதுச்சேரியில் அவை முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உண்டு. கிரண் பேடியை மூன்று முறை சந்தித்து, நேரடியாக அரசின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள். அமைச்சரவையின் கோப்புகளை சட்டவிதிகளுக்கு உட்பட்டு பார்வையிட்டு ஆலோசனை சொல்லுங்கள் என்று கூறினேன். துணைநிலை ஆளுநருக்கு நிர்வாகத்தில் ஏதேனும் சந்தேகமிருந்தால் எழுத்துப் பூர்வமாகக் கொடுத்து விளக்கம் பெற வேண்டும். அதைவிடுத்து நேரடியாக நிர்வாகத்தில் தலையிடுவது ஏற்புடையதல்ல. ஆனால் கிரண் பேடி தொடர்ந்து வரம்பு மீறி செயல்படுகிறார்” என்று அவர் கூறினார்.