டிரெண்டிங்

ஆதார்கார்டை முடக்குவோம்... குடும்ப பெண்களின் கழுத்தை நெறிக்கும் சுய உதவிக்குழு கடன்கள்...

kaleelrahman

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய நடுத்தர மக்கள் போதிய வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிதிநிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளன.

இந்நிலையில், கிராம மற்றும் நகர பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களது கடன்களை திரும்பசெலுத்த முடியாத நிலை உள்ளது. மதுரை சக்கிமங்கலம் அருகே அன்னை சத்யாநகர் பகுதியில் வசிக்கும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 130பேர் தாங்கள் பெற்ற கடனை செலுத்தமுடியாத நிலையில் தங்களிடம் நிதி நிறுவனத்தினர் உடனடியாக பணத்தை செலுத்துமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.

அதேபோல் தங்களது ஆதார் கார்டை முடக்கி விடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும், பணத்தை செலுத்தாவிட்டால் வட்டியை இரட்டிப்பாக மாற்றுவோம் என்றும், தங்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறி 100க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மகளிர்குழுவினர். ஊரடங்கால் வாழ்வாதாரம் இல்லாத நிலையில் வசூல் என்ற பெயரில் எங்களை மிரட்டும் தனியார் நிதிநிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.