டிரெண்டிங்

சட்ட சிக்கல் தீர்ந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும்: விஜயபாஸ்கர்

சட்ட சிக்கல் தீர்ந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும்: விஜயபாஸ்கர்

webteam

நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு சில கூடுதல் விவரங்களைக் கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் விலக்குக்கோரி தமிழக அரசு கொடுக்கும் அழுத்தத்தை மத்திய அரசு செயல்படுத்தத் தயாராக இருந்தாலும் சட்ட சிக்கல்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருவதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக மத்திய அரசு சாதகமான பதிலைக் கூறியுள்ளது. இன்று காலை கூட கூடுதலாக சில விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. அவற்றைக் கொடுப்பதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், சுகாதாரத்துறை செயலாளரும் சென்றிருக்கிறார்கள். தொடர்ந்து தமிழக அரசு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

மேலும், “இந்தியாவில் எந்த மாநிலமும், நீட் தேர்வுக்காக இவ்வளவு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் தமிழக அரசு மட்டும்தான் கடைசிவரை போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கவுன்சிலிங் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், நீட் விலக்குக்காக அரசு தீவிரமாகப் போராடிவருகிறது. இதற்கான சட்ட சிக்கல்கள் மற்றும் தடைகளைத் தாண்டிவிட்டால் கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும். அதுதான் அரசின் கொள்கை முடிவும் கூட” என்று அவர் கூறினார்.