டிரெண்டிங்

ரஜினியின் அரசியல் பிரவேசம்‌- நல்லக்கண்ணு கருத்து

ரஜினியின் அரசியல் பிரவேசம்‌- நல்லக்கண்ணு கருத்து

webteam

அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், தமிழருவியன் மணியன் மட்டும் தான் அதுகுறித்து பேசிக் கொண்டிருப்பதாக இந்தி‌ய கம்யூனிஸ்ட் கட்சித் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். 

திருவாரூரில் புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த அவர், அரசியல் என்பது சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் என்றும் தெரிவித்தார். "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதேநேரத்தில் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை தமிழருவிமணியன் தான் கூறுகிறார். கடந்ததேர்தலில் அவரும் வியூகங்களை வகுத்தார் நாங்களும் வகுத்தோம் யாருடைய வியூகமும் பலிக்கவில்லை. தேர்தல் வரும் பொழுதுபார்க்கலாம்" என்றார். 

மேலும் பேசிய அவர் "தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியது உண்மை. கழக ஆட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும், கம்யூனிஸ்டுகள் மற்றும் சிறுபாண்மையினர் ஒழிக்கப்பட வேண்டும் என பாஜகவினர் கூறுகின்றனர். இதில் எதை மக்கள் ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை, அரசியல் என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுப்படுவது என்பதுதான் நிதர்சனம்." என அவர் கூறினார்.