ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா வகையிலும் தமிழகத்திற்கு நல்லது செய்வார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவருக்குத்தான் தெரியும் என்றார். இருப்பினும் அவர் அரசியலுக்கு வந்தால் எல்லா வகையிலும் தமிழகத்திற்கு நல்லது செய்வார் எனக் குறிப்பிட்ட அவர், நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் விரைவில் தனது அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா வகையிலும் தமிழகத்திற்கு நல்லது செய்வார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.