டிரெண்டிங்

பீகாரில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: லாலு குற்றச்சாட்டு

பீகாரில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: லாலு குற்றச்சாட்டு

webteam

பீகாரில் நடைபெற்று வரும் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக லாலு பிரசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊழல் புகார்கள் தொடர்பாக லாலுவின் மகள் மிசா பாரதியின் வீடு, அவரது கணவரின் அலுவலகம் ஆகியவற்றில் சிபிஐ அண்மையில் ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக ஆலோசிக்க ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய லாலு பிரசாத், தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு சதி செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். ஊழல் புகாரில் சிக்கியுள்ள தனது குடும்பத்தினர் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என்றும் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். இதனிடையே, லாலு பிரசாத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நேற்றிரவு தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.