தமிழகத்தில் இந்தி மொழியை சிலர் எதிர்ப்பதாகவும் ஆனால் அந்த எதிர்ப்பு மட்டுமே தமிழுக்கான பாதுகாப்பாக அமைந்து விடாது என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு மொழியையும் எவர் மீதும் திணித்துவிட முடியாது. அப்படி திணிப்பதாக கருதினால் அந்த மொழியை எதிர்க்கலாம். ஆனால் அந்த எதிர்ப்பு மட்டுமே தமிழ் மொழிக்கு ஆதரவு என்ற பொருள் சொல்ல முடியாது. அதேபோல் எதிர்ப்பு மட்டுமே தமிழிற்கான பாதுகாப்பு என்றும் ஆகிவிடாது. காரணம், தமிழ்நாட்டில், எனக்கு தமிழ் படிக்க வராது என்று சொல்கிற தலைமுறை உருவாகிவிட்டது என்கிற ஆதங்கத்தை, தமிழ் மீது இருக்கும் அன்பின் காரணமாக வெளிப்படுத்தி வருகிறேன்” என்றார்.