டிரெண்டிங்

”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்

”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்

webteam

தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், “அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் தலைவர் விஜயகாந்த் இதை அறிவித்துள்ளார்.

தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி. தமிழகத்தில் அனைத்து இடத்திலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அதிமுகவுக்கு வேலை பார்க்கவில்லை. பாமகவுக்கு வேலை பார்த்து வருகிறார்” என சாடினார்.