டிரெண்டிங்

“ராகுல் எதிர்த்ததால் நானும் எதிர்த்தேன்” -பாஜகவில் இணைந்த குஷ்பு

“ராகுல் எதிர்த்ததால் நானும் எதிர்த்தேன்” -பாஜகவில் இணைந்த குஷ்பு

webteam

பாஜகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டிற்கு எது நல்லது என்று போகப்போக புரிந்தது. அதனால் தான் பாஜகவில் இணைந்துள்ளேன். ஆளுங்கட்சியை விமர்சிப்பதுதான் எதிர்கட்சியின் விதிமுறை. அதைத்தான் நான் செய்து கொண்டிருந்தேன். பல இடங்களில் பாஜகவை ஆதரித்துள்ளேன்.

பாஜக தலைவர்கள் மீது எந்த ஊழலும் இல்லை. கட்சியில் மட்டுமே மாற்றம். கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. நான் அரசியல்வாதி என்பதைவிட சமூக சீர்திருத்தவாதி. மாற்றம் என்பது மனிதரின் இயல்பு. எதிர்க்கட்சியில் இருந்ததால் கட்டாய சூழலில் பாஜகவை விமர்சித்தேன். எனக்கு வேறு வழியில்லை. காங்கிரஸின் தலைவர் ஒரு கருத்தை கூறும்போது கீழே இருக்கும் நான் அதைத்தான் செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.