கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு எம்.எல்.ஏ.க்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் நாகர்கோவில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் ஆகிய இருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து குணமான நிலையில் ராஜேஷ்குமார் மற்றும் சுரேஷ்ராஜன் இருவரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தங்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவித்தனர்.