டிரெண்டிங்

நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கிறார் குமாரசாமி

நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கிறார் குமாரசாமி

webteam

மஜத கூட்டணி சார்பில் முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி . பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கர்நாடக மாநில முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் குமாரசாமி இன்று பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமானம் செய்து வைத்தார். துணை‌ முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள பரமேஸ்வரா பதவியேற்றார்.

இன்று நடைபெற்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார் குமாரசாமி. 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் - மஜத அணி சார்பில் குமாரசாமி முதல்வராக பதவியேற்ற விழாவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்களை ஓரணியில் திரண்டுள்ளனர். இது 2019 மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைய வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதிவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு வருகை தந்துள்ள தலைவர்களால் பெங்களூரு நகரமே ஸ்தம்பித்தது. பல மணிநேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.