டிரெண்டிங்

பாஜகவினரை சந்தித்ததில் என்ன தவறு ? ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் கேள்வி!

பாஜகவினரை சந்தித்ததில் என்ன தவறு ? ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் கேள்வி!

webteam

சஸ்பெண்ட் செய்ததை திரும்பப் பெறுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் அண்மையில் டெல்லி சென்று பாஜக அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பினார். இதையடுத்து திமுக, அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ததோடு அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதிலளித்துள்ள கு.க.செல்வம், “தாங்கள் அனுப்பிய நோட்டீஸில் விவரங்கள் இல்லை. நான் என்ன பொய்யான தகவலை சொன்னேன். திமுக தொண்டர்கள் மற்ற கட்சித் தலைவர்களையோ, தொண்டர்களையோ சந்திக்க கூடாது என எங்கும் குறிப்பிடவில்லை.

கருணாநிதியை பாஜகவை சேர்ந்த மோடி நேரில் வந்து பார்த்தது அனைவருக்கு தெரியும். ஆகவே கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது. என் மீதான குற்றச்சாட்டு நோட்டீஸை திமுக திரும்ப பெற வேண்டும். சட்டப்படி விசாரணை வைத்து நான் அறிக்கையில் கேட்ட விவரங்களை அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்” எனத் தெரிவித்துள்ளார்.