கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளது அதற்கான ஆதாரமும் உள்ளது என்கிறார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி...
சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, கோமியம் குடித்ததால் 15 நிமிடத்தில் சன்யாசி ஒருவருக்கு காய்ச்சல் குணமானது என்று கூறியிருந்தார். மேலும் கோமியம், பாக்டீரியா பூஞ்சை செரிமான பிரச்னைகளை எதிர்க்கும் சிறந்த மருந்து என்றார்.
இவரின் இத்தகைய பேச்சு சர்ச்சையான நிலையில், பல கட்சித்தலைவர்களும் இதற்கு கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். வெளியில்தானே பேசினார் மாணவர்கள் மத்தியில் பேசவில்லையே என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கோமியத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது அதற்கான ஆதாரமும் உள்ளது என்று தான் கூறிய சர்ச்சைப்பேச்சுக்கு இன்று செய்தியாளர்களிடையே காமகோடி விளக்கமும் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
”கோமியத்தில் sciencefic validation இருக்கா இல்லையா என்பதுதான் உங்களின் கேள்வி... அமெரிக்க இதழில் மற்றும் நேச்சர் இதழில் வெளி வந்துள்ள ஐந்து பேப்பர் ஒரு பேட்டண்ட் அனுப்புகிறேன். அதில் கோமியத்தில் anti fungal, anti bacterial, anti inflammatory properties இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக விளக்கி இருக்கின்றனர். பஞ்சகவ்யக்ரிதம் என்ற பொருள் கூட அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது.”என்று விளக்கம் கொடுத்துள்ளார்.