டிரெண்டிங்

CSK vs KKR: 15-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது கொல்கத்தா!

EllusamyKarthik

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 15-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. 

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா. அந்த அணிக்காக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரஹானே தொடக்க வீரர்களாக களம் இறங்கி இருந்தார்கள். வெங்கடேஷ் ஐயர் 16 ரன்கள் எடுத்து பவர்பிளே ஓவர்கள் முடிந்ததும் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த நித்திஷ் ராணா 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரஹானே 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

பின்னர் அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ் உடன் கூட்டணி அமைத்தார். இருவரும் 36 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாம் பில்லிங்ஸ் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். முடிவில் அந்த அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.