டிரெண்டிங்

123 ரன்களில் சுருண்ட பஞ்சாப்! எளிய இலக்கை நோக்கி களம் இறங்கும் கொல்கத்தா!

123 ரன்களில் சுருண்ட பஞ்சாப்! எளிய இலக்கை நோக்கி களம் இறங்கும் கொல்கத்தா!

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் 21வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது. 

அந்த அணிக்காக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இணைந்து 36 ரன்கள் எடுத்த போது ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் ராகுலை வெளியேற்றினார் கம்மின்ஸ். அடுத்த ஓவரில் கிறிஸ் கெயில், எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஷிவம் மாவி பந்து வீச்சில் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

தொடர்ந்து தீபக் ஹுடா பிரசித் பந்துவீச்சிலும், மயங்க் அகர்வால் மற்றும் ஹென்ரிக்ஸ், நரைன் சுழலில் அவுட்டாகியும் வெளியேறினர். பூரன், மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சுழலில் கிளீன் போல்ட் ஆனார். 

79 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப். தொடர்ந்து ஷாருக் கானும் 13 ரன்களில் பிரசித் பந்துவீச்சில் அவுட்டானார். 19வது ஓவரில் கம்மின்ஸ் வேகத்தில் ரவி பிஷோனியும் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் ஜோர்டன் 18 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். அதில் 3 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரி அடங்கும். இருப்பினும் கடைசி ஓவரில் 2 சிக்ஸ் அடித்த பிறகு பிரசித் பந்துவீச்சில் அவர் அவுட்டானார். 

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 124 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.