டிரெண்டிங்

கொடைக்கானல்: வெள்ள அபாய எச்சரிக்கை.. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.!

கொடைக்கானல்: வெள்ள அபாய எச்சரிக்கை.. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.!

kaleelrahman

கொடைக்கானல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரி இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏற்கனவே ஐந்து நாட்களுக்கு முன்னர் முழு கொள்ளளவை எட்டியபோது, வெள்ளம் ஏற்படும் என்ற காரணத்திற்காக நீர் திறக்கப்பட்டு ஏரியின் நீர்மட்டம் குறைக்கப்பட்டு மதகுகள் அடைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று இரவு பெய்த தொடர் கன மழையால், ஏரி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியதோடு தடுப்பணையை தாண்டி நீர் வழிந்தோடியது. இதனால் இன்று ஏரியின் நீர் மட்டத்தை 1.5 அடி வரை குறைத்து வைக்க நகராட்சியால் முடிவெடுக்கப்பட்டு, மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஏரிநீர் வேகமாக வெளியேறுவதால், வெள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்லும் கரையோர பகுதிகளான எம்ஜிஆர் நகர், வண்ணாந்துறை, குறிஞ்சி நகர் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கும், பேத்துப்பாறை கிராம கரையோர பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க கொடைக்கானல் நகராட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.