டிரெண்டிங்

கொடைக்கானல்: பணியாளர்களை நியமிக்காததால் பயன்பாட்டுக்கு வராத 108 ஆம்புலன்ஸ்

கொடைக்கானல்: பணியாளர்களை நியமிக்காததால் பயன்பாட்டுக்கு வராத 108 ஆம்புலன்ஸ்

kaleelrahman

கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு வழங்கப்பட்ட மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டிற்கு வராமல் நிறுத்தி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான, பூம்பாறை, மன்னவனூர் மற்றும் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு கிராமங்களுக்கு என்று, தனித்தனியே மூன்று 108 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அதனை இயக்க பைலட்டும், மருத்துவ உதவியாளரும் பணியமர்த்தப் படாமல், அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

50 கிலோமீட்டர் தூரமுள்ள மேல்மலை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் அவசர மருத்துவ தேவை வேண்டும் என்றால், கொடைக்கானலில் இருக்கும் ஒரே 108 வாகனம் மட்டுமே சென்று, சிகிச்சை வேண்டுவோரை மருத்துவமனைக்கு அழைத்து வரும்நிலை உள்ளது. இதனால் அவசர சிகிச்சைகான ஆம்புலன்ஸ் தாமதமாக வருவதாக மேல்மலைகிராம மக்கள் கூறுகின்றனர்.

ஆகையால் நிறுத்தப்பட்டுள்ள மூன்று 108 வாகனங்களுக்கும் விரைந்து பணியாளர்களை நியமித்து, அந்த அந்த கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர் இது குறித்து உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, வாகனங்களை அந்த அந்த கிராமங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.