கொச்சியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தலையில் தென்னைமரம் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தென்னைமரத்திலிருந்து தேங்காய் தானாக கீழே விழும்பொழுது அது மனிதர்களின் தலையில் விழுவது என்பது மிகவும் அரிது என்பார்கள். அதுவும் உண்மைதான். தென்னைமரத்திலிருந்து தேங்காய் தலையில் விழுந்து காயம், தென்னை மரம் சரிந்து விழுந்து சேதம் என்று வரும் செய்திகள் மிக குறைவு.. ஆனால் கேரளா மாநிலத்தில் கொச்சியில் இச்செய்தியை பொய்ப்பிக்கும் வகையில், தென்னைமரம் ஒன்று விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியை அடுத்த பெரும்பாவூர் பொய்ஞ்சசேரியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அலிஹசன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவரது 4 வயது சிறுவன் முஹமது அலி அமீன் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். இவர் விளையாடி வந்த இடத்தில் அடிபாகம் உலுத்த நிலையில் தென்னை மரம் ஒன்று இருந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது அந்த உலுத்த தென்னை மரமானது திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.