டிரெண்டிங்

எளிதில் வெல்ல வேண்டிய ஆட்டத்தில் தோல்வியை தழுவிய கொல்கத்தா! முதல் வெற்றியை பெற்றது மும்பை!

எளிதில் வெல்ல வேண்டிய ஆட்டத்தில் தோல்வியை தழுவிய கொல்கத்தா! முதல் வெற்றியை பெற்றது மும்பை!

EllusamyKarthik

சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் ஐந்தாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152  ரன்களை குவித்தது. 

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில் மற்றும் நித்திஷ் ராணா இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் குவித்தனர். கில் 24 பந்தகுளில் 33 ரன்கள் குவித்து அவுட்டானார். பின்னர் களத்திற்கு வந்த திரிபாட்டி, மோர்கன் என இருவரும் அடுதடுத்து அவுட்டாகி வெளியேறினர். 

நித்திஷ் ராணா அரை சதம் கடந்த நிலையில் 15வது ஓவரில் அவுட்டானார். ஷகிப் அல் ஹசனும் 16வது ஓவரில் அவுட்டானார்.  ஒரு கட்டத்தில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. ராகுல் சாஹர் நான்கு விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். 

கடைசி ஆறு பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை போல்ட் வீசினார். தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் களத்தில் இருந்தனர். இருவரும் முதல் இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன் எடுத்தனர். மூன்றாவது பந்தில் போல்ட் வசமே கேட்ச் கொடுத்து அவுட்டானார் ரசல். அடுத்த பந்தில் கம்மின்ஸை கிளீன் போல்ட் செய்தார் போல்ட்.  இருந்தும் ஹாட்ரிக் வாய்ப்பை இழந்தார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது கொல்கத்தா.

மும்பை அணியின் பவுலர்கள் டெத் ஓவரில் அற்புதமாக பந்து வீசி வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். பும்ரா, போல்ட், குர்ணால் கடைசி ஐந்து ஓவர்களை வீசினர். அதன் மூலம் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நித்திஷ் ராணா மற்றும் கில்லை தவிர கொல்கத்தா அணிக்காக விளையாட களத்திற்கு வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ரன்களை எடுத்தனர். அதுவே தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.