பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில், இந்துத்துவத்தை புகுத்த பாரதிய ஜனதா முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மத்தியில் அக்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால், அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
எனவே கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதகம் ஏற்படாமல் முற்போக்கு, மதச்சார்பற்ற, ஜனநாயக அணிகள் ஓரணியில் திரண்டு சமூகநீதியைக் காக்க வேண்டும் என்றும் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.