டிரெண்டிங்

கருணாநிதியுடனான படம்: குஷ்புவின் ட்விட்டர் கிளப்பிய அதிர்ச்சி

கருணாநிதியுடனான படம்: குஷ்புவின் ட்விட்டர் கிளப்பிய அதிர்ச்சி

webteam

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தின் ப்ரொஃபைல் படமாக திமுக தலைவர் கருணாநிதியுடன் இருக்கும் படத்தை வைத்துள்ளது, காங்கிரஸ் கட்சியிரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குச் சென்ற குஷ்புவுக்கு, அக்கட்சி தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியை கொடுத்தது. இதனிடையே நடிகை நக்மா மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளராக காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்டார்.

திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவிற்காக சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எவ்வளவோ முயன்றும் குஷ்புவால் அவரைச் சந்திக்கமுடியவில்லை என்றும் அதற்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்றும் செய்திகள் அடிபட்டன. இந்த நிலையில் குஷ்பு கருணாநிதியுடன் உள்ள படத்தை ட்விட்டர் ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. 

வைர விழா கண்ட கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கூட குஷ்பு அப்படத்தை வைத்திருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். திடுதிப்பென்று குஷ்பு ஏன் தனது ப்ரொபைலை மாற்றினார் என்பது அவருக்கே வெளிச்சம்.