டிரெண்டிங்

விஷாலுக்கு வாழ்த்து கூறி குழப்பம் ஏற்படுத்துகிறார் குஷ்பு: கராத்தே தியாகராஜன்

விஷாலுக்கு வாழ்த்து கூறி குழப்பம் ஏற்படுத்துகிறார் குஷ்பு: கராத்தே தியாகராஜன்

webteam

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவில் பேசிய குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிரந்தரத் தலைவர் என்று கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் சோனிய காந்தி மற்றும் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த பின்பும், சுயேச்சையாகப் போட்டியிடும் விஷாலுக்கு வாழ்த்து கூறி, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் குஷ்பு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தொடர்ந்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் குஷ்பு மீது கட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.