டிரெண்டிங்

டிவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறிய குஷ்பு

டிவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறிய குஷ்பு

webteam

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.

சமூகவலைத்தளங்களில் தனது கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வந்தார் குஷ்பு. அவர் டிவிட்டரில் பதிவிட்டு வந்த சில கருத்துகள் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தின. இந்நிலையில் அவர் டிவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறி உள்ளார். 

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இறுதியாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், புத்தகங்கள் படிப்பதில் கவனம் செலுத்துவதற்காக சிறிது காலம் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறுகிறேன். இதுவரை நட்புடன் என்னை ஆதரித்து அன்பு பாராட்டிய நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைத்தளத்தை தேச ஒருமைப்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுகிறேன். வெறுப்புணர்வையும், பழியுணர்வையும் விடுத்து, அன்புணர்வை பரவலாக்க ட்விட்டர் தளத்தை பயன்படுத்துமாறு எனது நண்பர்களை வேண்டுகிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார். குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை சுமார் பத்து லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.