நடிகை ஹனி ரோஸ், பாபி செம்மனூர் கூகுள்
டிரெண்டிங்

"பெண்களின் உடலை வர்ணிப்பதும் பாலியல் சீண்டலாகும்" : கேரள உயர் நீதிமன்றம்

பெண்களின் உடல் அமைப்பை வர்ணித்து கூறுவது கூட பாலியல் சீண்டலுக்கு கீழ்தான் வரும் என கேரள உயர் நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது.

PT WEB

பெண்களின் உடல் அமைப்பை வர்ணித்து கூறுவதுகூட பாலியல் சீண்டலுக்குக் கீழ்தான் வரும் கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

கேரள மின்வாரிய ஊழியர் ஒருவர் தன் மீதான பாலியல் சீண்டல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, தொடர்ந்த வழக்கில் இக்கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உடலமைப்பை வர்ணிப்பது பாலியல் சீண்டலுக்கு கீழ் வராது என அந்த ஊழியர் தரப்பில் வாதிட்ட நிலையில் அதை நீதிபதிகள் மறுத்து அவரது மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

நடிகை ஹனி ரோஸ் அளித்த பாலியல் சீண்டல் புகாரில் கேரளாவின் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளார். வயநாட்டில் வைத்து அவரை காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக்குழு கைது செய்தது. நடிகை ஹனி ரோஸ் அளித்த புகாரின் பேரில் பாபி செம்மனூர் மீது பிணையில் வர இயலாத பிரிவுகளில் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டது தனக்கு நிம்மதி தருவதாக ஹனி ரோஸ் கூறியுள்ளார். இவ்விவகாரத்தை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தெரிவித்ததாகவும் கடும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தததாகவும் ஹனி ரோஸ் தெரிவித்தார்