2021ல் கேரளா பத்தினாபுரம் போலி தங்கத்தை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த குற்றத்தில் மூளையாக செயல்பட்ட கோட்டயம் வைக்கம் பருவை சேர்ந்த அனுசந்திரன், வைக்கம் மணக்கல் சிராயிலை சேர்ந்த பிஜூ, பத்தனாபுரத்தை சேர்ந்த இடைத்தரகர் ஷெபீர் ஆகியோர் தங்கத்தை அடகு வைத்து பத்தனாபுரம், குண்டயம் தனியார் வங்கிகளில் கொண்டு சென்றனர். ஊழியர்கள் அவர்களை அடையாளம் கண்டு போலீசாரிடம் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து 3 பேரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் அதன் பிறகு கூடல் போலீசார் அவர்களை காவலில் எடுக்கலாம்.
என்ன வழக்கு இது? பிண்ணனி என்ன? என்பதை பார்க்கலாம்
பத்தினாபுரத்தை சேர்ந்த பிஜு என்பவர் நிதிநிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் பொதுமக்கள் அடமானம் வைக்கும் தங்க நகைகளை எடுத்து வங்கிகளில் வைத்து அதில் அதிக பணத்தைப்பெற்று கோடிகணக்கில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். நகை அடமானம் வைத்தவர்கள் அதை மீட்க வந்த பொழுது, பிஜு தான் வங்கியில் வாங்கிய பணத்தை செலுத்தமுடியாத நிலையில், நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறார். நண்பர்கள் போலி தங்கத்தை பற்றி தகவல் தரவே, பிஜு போலி தங்கத்தை தயார் செய்துள்ளார். இந்த போலி தங்கத்தை உரசி பார்த்தாலும் அல்லது இயந்திரத்தைக்கொண்டு சோதித்தாலும், போலி என்று தெரியவராமல் இருக்கவே, பிஜு போலி தங்கத்தை தனியார் வங்கியில் அடமானம் வைத்து பணத்தைப்பெற்று வேறொரு வங்கியில் தான் அடமானம் வைத்திருந்த தன் வாடிக்கையாளர்களின் நகைகளை மீட்டுக்கொடுத்து வந்துள்ளார்.
ருசிகண்ட பூனை விடாது என்ற பழமொழிக்கு ஏற்ப, வங்கிகள் இவரின் போலி தங்கத்தை கண்டுபிடிக்காததால், மேலும் போலி தங்கத்தை தயார் செய்து பொதுத்துறை வங்கியில் அடமானம் வைத்து பல லட்சத்தை ஏமாற்றி பெற்று ஆடம்பரமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், பிஜுவின் பித்தலாட்டம் வெளியில் கசிந்ததை அடுத்து, போலீசார் பிஜுவின் மேல் பார்வையைத் திருப்பியுள்ளனர். இதில் பிஜுவுடன் சேர்ந்து சிலர் போலி தங்கத்தை வங்கியில் வைத்து மோசடி செய்து பணத்தை பெற்றுக்கொண்டது தெரிய வந்ததை அடுத்து, பிஜுவுடன் அவரது நண்பர்கள் 3 வர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.