டிரெண்டிங்

அதிமுக கூட்டணியில் இருந்து கருணாஸ் விலகல்

அதிமுக கூட்டணியில் இருந்து கருணாஸ் விலகல்

webteam

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்கள் சமுதாயத்தினர் இடஒதுக்கீட்டிற்கு நீண்ட நாட்களாக போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மறுக்கப்படுகிறது. சமூக நீதியில் எண்ணற்ற மக்களை புறந்தள்ளி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு சில சமுதாயத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து எங்களை விடுவித்துக்கொள்கிறோம். நாங்கள் 84 தொகுதியில் எனது தலைமையில் போட்டியிட இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.