அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி, டி ஆர் பாலு, கே. என். நேரு மற்றும் அறிவாலய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக முரசொலி அலுவலகம் மற்றும் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கலைஞர் படத்திற்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கோபாலபுரத்தில் ஸ்டாலினுடன் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் இணைந்து மரியாதை செலுத்தினர்
மேலும், புகழஞ்சலி செலுத்தும் வகையில் “எங்கெங்குக் காணினும் கலைஞர்!’ என்ற காணொலியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்