டிரெண்டிங்

கருணாநிதியிடம் வாசித்துக் காட்டப்பட்ட சோனியாவின் வாழ்த்து மடல்

கருணாநிதியிடம் வாசித்துக் காட்டப்பட்ட சோனியாவின் வாழ்த்து மடல்

webteam

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வைரவிழாவுக்கு அனுப்பி உள்ள வாழ்த்துக் கடிதத்தை, திமுக தலைவர் கருணாநிதியிடம், உதவியாளர் சண்முகநாதன் வாசித்துக் காண்பித்துள்ளார். இந்தக் காட்சி வெளியாகி உள்ளது.

கருணாநிதியின் 94ஆவது பிறந்த நாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைரவிழாவினை திமுக பிரமாண்டமாகக் கொண்டாடுகிறது. இதற்காக சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை நடைபெறும் விழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.