திமுக தலைவர் கருணாநிதி தன் கொள்ளுப்பேரன் மகிழனுடன் மாலை வேளையில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகின்றனர்.
கடந்த 1 வருடமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை மற்றும் தனது கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சமீபமாக நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. “ கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மற்றொரு அதிசயத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்” என மருத்துவர் கோபால் கூறி சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதாவது கருணாநிதி விரைவில் பேசுவார் என்பதைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டதாக பேசப்பட்டது. கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை எடுத்து விட்டு அவருக்கு பேச்சு பயிற்சி கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின.
தற்போது உடல் நலம் நன்கு தேறி வரும் நிலையில், கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி அளிப்பதற்காக மு.க.தமிழரசனின் பேரனும், நடிகர் அருள்நிதியின் 2 வயது மகனுமான மகிழனை அழைத்து வந்து மாலையில் அவருடன் விளையாட்டு காட்டி பேச வைத்து வருகின்றனர். கருணாநிதியின் பேச்சு பயிற்சிக்கு உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியன் பேரில், மாலையில் மகிழனுடன் கருணாநிதி மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.