டிரெண்டிங்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

Rasus

திமுக தலைவர் கருணாநிதி மூன்று மாதங்களுக்கு பின் அண்ணா அறிவாலயம் சென்றுள்ளார்.

கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். சென்னை கோபாலபுத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஓய்வெடுத்து வருவதால் தொண்டர்கள் யாரும் அவரை நேரில் சந்திக்க வர வேண்டாம் எனவும் அப்போது திமுக சார்பில் தொண்டர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் திடீரென வருகை புரிந்தார். ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின்னர் அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி அப்போது வருகை தந்தது, தி.மு.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் மூன்று மாதத்திற்கு பின் இன்று திடீரென திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் சென்றுள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் கருணாநிதியை வரவேற்றனர். சிகிச்சைக்கு பின் தற்போது இரண்டாவது முறையாக கருணாநிதி அண்ணா அறிவாலயம் சென்றுள்ளதால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.