டிரெண்டிங்

தமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு கர்நாடக போலீஸ் நோட்டீஸ்

தமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு கர்நாடக போலீஸ் நோட்டீஸ்

Rasus

டிடிவி தினகரன் ஆதரவு எம்‌எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதி உரிமையாளருக்கு கர்நாடக காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க் எனப்படும் குடகு மலைப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். தமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள அந்த விடுதிக்கு கர்நாடக மாநில சந்திக்குப்பம்  காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன் என காவல்துறையினர் அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பியுள்ளனர். 3 நாட்களுக்குள் உரிய பதிலளிக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விடுதி உரிமையாளரை கர்நாடக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றொரு மாநிலத்திற்கு சென்று தங்கினால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்த பகுதி காவல்நிலையத்தை சார்ந்தது என்பதால் அவர்கள் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. 
கர்நாடகாவில் தமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதிக்குள் நேற்று நுழைந்த தமிழக காவல்துறையினர், பழனியப்பன் எம்எல்ஏ மீதான மோ‌சடி புகார் ‌‌குறித்து விசாரணை நடத்த சென்றதாகவும், ஆனால் பழனியப்பன் எம்எல்ஏ அங்கு இல்லாத காரணத்தினால் தமிழக போலீசார் திரும்பியதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் கர்நாடக காவல்துறையினர் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.